இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு

Tuesday, 27 October 2020 - 15:00

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+19%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு - 02 பகுதிகளை சேர்ந்த 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் பேலியாகொடை மீன் சந்தையில் பணியாற்றியவர் என பூண்டுலோயா பொது சுகாதார பரிசோதகர் கே.டி.டி.மதுசங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 110 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 8 ஆயிரத்து 413 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய தொற்றுறுதியான 4 ஆயிரத்து 43 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை தொற்றுறுதியான 4 ஆயிரத்து 354 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.