மின்சக்தி அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Tuesday, 27 October 2020 - 17:15

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் உள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மாதந்த மின்சார கட்டணப் பட்டியலை அடிப்படையாக கொண்டு மின்சார துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டளஸ் அழஹப்பெரும மின்சார சபைக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 பரவல் நிலைமையில் சீராக மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள மின்சார பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்துள்ளார்.