இந்தியாவின் இறைமையை பாதுகாப்பதற்காக அமெரிக்கா சகல வழிகளிலும் ஒத்துழைக்கும்- மைக் பொம்பியோ

Tuesday, 27 October 2020 - 20:00

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
இந்தியாவிற்கு ஏற்படுகின்ற எவ்விதமான அச்சுறுத்தல்களின் போதும், இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்திருக்கும் என்று, அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக அவர் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இந்தியாவில் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டிருந்த பொம்பியோ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

லடாக்கில் உள்ள இந்திய – சீனா எல்லையில் முறுகல் நிலவுகின்ற பின்னணியில், அவர் இந்த கருத்தினைக் கூறி இருக்கிறார்.

அதேநேரம் இந்தியா தமது இறைமையை பாதுகாத்துக் கொள்வதற்காக அமெரிக்கா சகல வழிகளிலும் ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.