யாழில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே சாரதி பலி...!

Wednesday, 28 October 2020 - 7:01

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக  பயணித்துக் கொண்டிருந்த மகிழூர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இராச வீதி ஊடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த மகிழூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் வாகனத்தின் சாரதி தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
 
அவருடன் பயணித்த சிவன் சரல தீபன்(வயது 23) பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி  காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.