கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்...!

Wednesday, 28 October 2020 - 8:33

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், மரணித்த இரண்டு பேரின் சடலங்களுக்கு, சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளில், அவர்களுக்கு கொவிட் 19 தொற்று இருந்தமை உறுதியானதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவருக்கும், கொழும்பு 2 ஐச் சேர்ந்த 87 வயதான வயோதிப பெண் ஒருவருக்குமே இவ்வாறு இறப்பின் பின்னர் கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

அவர்கள் இரண்டு பேருமே மரணிப்பதற்கு முன்னர் கடுமையாக நோய்வாய்பட்டிருந்ததாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 19 வயதான இளைஞர், பிறந்தது முதலே விசேட தேவையுடையவராக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இறந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் 41 வயதான ஜா-எலயைச் சேர்ந்த ஒருவரும், நேற்று கொவிட் 19 நோயினால் உயிரிழந்தநிலையில், மொத்தமாக இலங்கையில் கொவிட் 19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நாளில் மாத்திரம் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

இலங்கையில், இதுவரையில் கொரோனா தொற்றினால் நாளொன்றில் அதிகளவான மரணங்கள் நேற்றைய நாளில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.