பீகார் மாநில சட்ட சபைக்கான தேர்தல் இன்று...!

Wednesday, 28 October 2020 - 9:16

%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...%21
இந்தியாவின் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெறுகின்றன.

பீகார் சட்டமன்ற தேர்தலில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய, இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தேர்தலில் 114 பெண் வேட்பாளர்கள் உட்பட, ஆயிரத்து 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்றையதினம் வாக்குப் பதிவில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.