அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான முக்கிய அறிவிப்பு...!

Thursday, 29 October 2020 - 8:48

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைக்கு அமைய ஏனைய அரச சேவைகள் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும் என அரச சேவை, மாகாண சபை, உள்ளுராட்சிமன்ற அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சின் செயலாளர் ரத்னசிறி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி நடத்தி செல்லும் தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் கடமைகளை நிறைவேற்றுவதில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் - 19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் பிரதானிகளினால் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் செயலாளரினால் கடந்த ஏப்ரல் 18 மற்றும், மே மாதம் 14 ஆகிய தினங்களில் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டன.

அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டியினை, அனைத்து அரச நிறுவனங்களும் கடைப்பிடிக்குமாறு அரச சேவை, மாகாண சபை, உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.