FCID விசாரணைகளில் அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் காணப்பட்டது...!

Thursday, 29 October 2020 - 8:58

FCID+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81...%21
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஸ்தாபிக்கப்பட்ட காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஆட்சியிலிருந்த முன்னிலை அரசியல் வாதிகளினால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முன்னாள் சிரேஷ்ட்ட காவல் மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , மற்றும் முன்னாள் திரைசேரி செயலாளர் ஆர் எச் எஸ் சமரதுங்க ஆகியோரை நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.