பேலியகொடை காவல் துறை அரணில் ஒருவருக்கு கொரோனா...!

Thursday, 29 October 2020 - 10:27

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE...%21
பேலியகொடை மீன் சந்தையில் காணப்படும் காவல் துறை பாதுகாப்பு அரணில் கடமையாற்றிய காவல் துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீன் சந்தையில் வைரஸ் தொற்றியமையை தொடர்ந்து அதனை அண்மித்த அனைவருக்கு பீ .சீ.ஆர் பரிசோதனைகள் மெற்கொள்ளப்பட்டன.

இதன்போதே குறித்த காவல் துறை உத்தியோகத்தருக்கும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமையவே அவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை , வெள்ளவத்தை கொலிங்வூட் வீதியில் வசித்து வந்த இந்திய பிரஜை ஒருவருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.