வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 32 லட்சம் ரூபாய்...!

Thursday, 29 October 2020 - 10:43

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+32+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D...%21

மேல் மாகாணத்தில் இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம், சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கட்டானை - 50 ஏக்கர் பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்பாவல - கட்டியாவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹீனடிய பகுதியில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 32 லட்சம் ரூபாய் பணத்தினையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி மகிழுர்து ஒன்றில் பிரவேசித்த 7 பேர் கொண்ட குழு குறித்த வர்த்தகரின் வீட்டில் இருந்து கோடிக்கணக்காண பணத்தினை கொள்ளையிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.