கொரோனா நோயாளிகளின் பொழுது போக்குக்காக மருத்துவமனையொன்றில் நூலக வசதி

Friday, 30 October 2020 - 7:51

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF
தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா நோயாளிகளின் பொழுது போக்குக்காக மருத்துவமனையொன்றில் நூலக வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 700 புத்தகங்களுடன் இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பு அதிகம் இருப்பின் அரசாங்க மருத்துவமனைகளிலும், குறைவான பாதிப்புடையவர்களுக்கு தனிமைப்படுத்தல் மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், சிலர் மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இதனால் அரசாங்க மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை கவர்வதற்காக அவர்களின் பொழுது போக்கிற்கு பல்வேறு நடவடிக்கைகளில் மருத்துவமனை நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.

இதற்கமைய, ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நூலகம் நாளொன்றுக்கு 6 மணி நேரம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.