கடமைக்கு திரும்பிய காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்

Friday, 30 October 2020 - 9:08

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
கடமைகள் நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டு மீண்டும் காவல்நிலையத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவால் பியகம காவல்நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் திடீர் சுகயீனமுற்ற குறித்த பொறுப்பதிகாரி கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த 51 வயதுடைய பியகம காவல் நிலைய பொறுப்பதிகாரி நீர்கொழும்பு பகுதியில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் மாரடைப்பு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.