நட்பை மறக்காத சந்தானம்..!!

Friday, 30 October 2020 - 16:25

%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21%21
மறைந்த நடிகரும் தோல் சிகிச்சை வைத்தியருமான சேதுராமனின் பிறந்த நாளை முன்னிட்டு சேதுராமனின் 'சீ' மருத்துவ நிலையத்தின் கிளை ஒன்றை திறந்து வைத்துள்ளார் நடிகர் சந்தானம்.
 
நடிகர் சேதுராமன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 
 
கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி இரவு மாரடைப்பு காரணமாக சேது ராமன் உயிரிழந்தார்.
 
திரையுலகில் அவருக்கு இருந்த ஓரே நட்பு நடிகர் சந்தானம் மாத்திரம் தான் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இந்நிலையில் நேற்று 29 ஆம் திகதி நடிகர் சேது ராமனின் பிறந்த தினமாகும்.

இதனை முன்னிட்டு நடிகர் சந்தானம் தமிழ்நாட்டிலுள்ள ஈசீஆர் நகரில் சேது ராமனின் மருத்துவ நிலையமான 'சீ' மருத்துவமைனயின் கிளையை திறந்து வைத்துள்ளார். 
 
இது குறித்து நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் ' அன்புக்குரிய என் நண்பர் டாக்டர் சேதுராமனின் 'சீ கிளினிக்கினை' அவரது பிறந்த நாளில் ஈ.சீ.ஆரில் திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார். 
 
நடிகர் சந்தானத்தின் நட்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.