துருக்கியில் நிலநடுக்கம்- உயிரழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு

Saturday, 31 October 2020 - 8:36

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+22%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
துருக்கியின் எய்கியன் கரையோரம் மற்றும் வட கிரேக்கத்தில் நேற்று ஏற்பட்ட பாரிய நில அதிர்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியின் இஸ்மியர் மாகாணத்தை மையமாக கொண்டு 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வு ஏனைய பகுதிகளையும் தாக்கியுள்ளது.

22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 786 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வை அடுத்து மிகச் சிறிய அளவலான சுனாமி ஏற்பட்டதனை அடுத்து கரையோர நிலப்பரப்பில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடல்மட்டம் உயர்ந்ததனால் சில மீனவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான வீடுகள் முற்றாக அழிந்து போய் உள்ளதுடன், மேலும் பல கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தற்காலிக முகாம்களில்; தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்கு இடைய அகப்பட்டிருந்த 70 பேர் மீட்பு பணியாளர்களினால் மீட்கப்பட்டனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம்; என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், அவர்களை தேடும் பணி இன்று காலை முதல் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நில அதிர்வு பூமியில் இருந்து 16 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, பாதிப்படைந்த அனைத்து மக்களுக்கும் சகல உதவிகளும் வழங்குவதற்கான உத்தரவு துக்கிய ஜனாதிபதி ரீசெப் ரேயீப் எர்டொகன்னினால் விடுக்கப்பட்டுள்ளது.