பொருளாதார வளர்ச்சி 2021இல் மீளெழுச்சியடையும்...!

Friday, 06 November 2020 - 8:42

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+2021%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
பொருளாதார வளர்ச்சி 2021இல் மீளெழுச்சியடையும் எனவும் அரசாங்கத்தின் வளர்ச்சியை நோக்கிய கொள்கைகளினால் ஆதரவளிக்கப்பட்டு நடுத்தரகாலத்தில் மேல்நோக்கிய பாதையில் பேணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளும், பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையின் மீதான அழுத்தத்தினை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அடிப்படையில் தணிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், கொவிட் - 19 தொற்றை உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் வெற்றிகரமாக மட்டுப்படுத்துவது எதிர்வரும் காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார மீட்சியினதும் மீளெழுச்சியினதும் வேகத்தினையும் பிரமாணத்தினையும் தீர்மானிப்பதில் தொடர்ந்தும் பிரதானமானதாகவுள்ளது.