பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விரைவான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வழிவகுத்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி..!

Sunday, 08 November 2020 - 9:06

%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF..%21
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) உடன் சுகாதார அமைச்சகம் இணைந்து,
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விரைவான பி.சி.ஆர் பரிசோதனைகளை
மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

Robotic Arm இணக்கமான 4000 பரிசோதனைக்
கருவிகளுக்கான டயலொக்கின் பங்களிப்பானது, கோவிட் -19 தொற்றுநோய்களின் போது
தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தற்போதைய
உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.


ஏப்ரல் 2020 இல், கோவிட் -19 தொற்றுநோயுடன் தொடர்புடைய சிக்கலான சுகாதார
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டயலொக் ரூ.2000 இலட்சம் தொகையை
வழங்குவதற்கான உறுதி மொழியை அளித்தது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரின் உறுதிமொழிக்கு அமைய சில வாரங்களுக்குப் முன்பு நீர்கொழும்பு
மருத்துவமனையில் 10 படுக்கைகளை கொண்ட ICU ஐ மேம்படுத்த உதவியுள்ளதுடன் மேலும்
பல ICU விரிவாக்கங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.


Robotic Arm பி.சி.ஆர் சோதனை வசதி பி.சி.ஆர் பரிசோதனையை நடத்துவதற்கும் முடிவுகளை
அறிக்கையிடுவதற்குமான நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து 2.5 மணி நேரமாக வெகுவாக
குறைக்கின்றது.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி
சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், &quot CE மற்றும் ஐரோப்பிய IVD சான்றளிக்கப்பட்ட
உலகத் தரம் வாய்ந்த ரோபோ தீர்வுகள், 32 மாதிரிகளை இணையாக செயலாக்குவதுடன்,
கணிசமாக பாதுகாப்பான மற்றும் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலை வெறும் 2.5
மணி நேரத்தில் செயல்படுத்துகிறது.

இந்த பொறிமுறையானது வாரத்திற்கு மனித நேரங்களை பயனுள்ளதாக குறைப்பதன் மூலம் சுகாதாரத் துறைக்கும் அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் சிறப்பாக உதவுகிறது.

இந்த ரோபோ தீர்வுகள் மூலம் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலுடன் பயணிகளின் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முயற்சியில் பங்கேற்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்”என தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர்
கௌரவ பவித்ரா வன்னியராச்சி, &quot பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிவேக
ரோபோ பி.சி.ஆர் பரிசோதனைக்கு வசதி செய்வது டயலொக்கின் மற்றொரு சிறந்த
முயற்சியாகும். ஏனெனில் அவர்கள் இலங்கையில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான
எங்கள் முயற்சிகளில் சுகாதார அமைச்சகத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

டயலொக்கின் இந்த சமீபத்திய பங்களிப்பானது நாட்டின் முக்கியமான சுகாதார
உள்கட்டமைப்பு மற்றும் பல பாராட்டத்தக்க முயற்சிகளை அபிவிருத்தி செய்வதாக சுகாதார
அமைச்சகத்திற்கு வழங்கிய ரூ.2000 இலட்சம் உறுதிமொழிக்கு அமையவே இடம்பெறுகின்றது.
டயலொக் ஆசிஆட்டாவின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் இந்த தேசிய முயற்சிக்கு அவர்கள்
அர்ப்பணித்த சேவைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்
கொள்கிறோம் என கூறினார்.