ஐ.பி.எல் தொடர்பில் வெளியாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்குலி

Sunday, 08 November 2020 - 20:29

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF
அடுத்த ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்தியன் பிரிமியர் லீக் தொடர் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கமைய அடுத்த ஆண்டும் குறித்த தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என சவுரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் எனவும் இந்தியாவிலேயே அந்த தொடர் இடம்பெறும் எனவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.