புறக்கோட்டை மொத்த வர்த்தக பறிமாற்றத்திற்கு இணையாக பாரியளவான தேசிய பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அநுராதபுரம் - மிஹிந்தலை பகுதியில் நிர்மாணிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள பகுதியில் நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மொத்த வர்த்தக மத்திய நிலையம் திடீரென மூடப்பட்டால் குறித்த இடத்தில் இருந்து பொது மக்களுக்கு பொருட்களை விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இதேபோன்று பிரதான மொத்த வர்த்தக பறிமாற்ற மத்திய நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.