பங்குச் சந்தை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த கொழும்பு பங்கு சந்தை தீர்மானித்துள்ளது...!

Monday, 09 November 2020 - 14:41

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%21
பங்குச் சந்தை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த கொழும்பு பங்கு சந்தை தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய கொழும்பு பங்கு சந்தையில் இணையும் புதிய நிறுவனங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளது.

தற்போது கொழும்பு பங்கு சந்தையில் 285 நிறுவனங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பங்கு பரிவர்தனை நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளும் நிறுவனங்கள் இலகுவாக இணைவதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு பரிவர்தனை நடவடிக்கைகளை இலகுவாக்கும் நோக்கில், நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

அதிக அளவிலான நிறுவனங்களை இணைத்துக் கொள்வதில் கொழும்பு பங்கு சந்தை முன்னுரிமை வழங்குவதுடன், ஆவலாகவும் உள்ளதாகவும் அதன் தலைவர் துமித் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.