இன்று இரவு 7.30 இற்கு இந்தியன் பிரிமியர் லீக் 2020' தொடரின் இறுதிப் போட்டி ..!

Tuesday, 10 November 2020 - 12:20

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+7.30+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+2020%27+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+..%21
இந்தியன் பிரிமியர் லீக் 2020' தொடரின் இறுதிப் போட்டி டுபாயில் இன்று இரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி எதிர்கொள்கின்றது.

இந்தியன் பிரிமியர் தொடர் ஐக்கிய அரபு ராட்சியத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் நடைபெற்ற நிலையில் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த 3 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து தற்போதைய நடப்பு சம்பியனான மும்பாய் இந்தியன்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்;, ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பெற்றன.

இந்தநிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியன.

இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

முன்னதாக 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.

அதேவேளை, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதன் முறையாக இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.