இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவை தலைவராக நியமிக்க வேண்டுமென கௌதம் கம்பீர் ஆலோசனை

Thursday, 12 November 2020 - 9:15

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
இந்திய கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவராக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அப்படி ரோஹித் சர்மா நியமிக்கப்படாவிட்டால் அது இந்திய அணிக்கு பாரிய இழப்பாக அமையும் எனவும் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கௌத்தம் கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இந்திய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் விராட் கோலி தலைமை வகித்து வரும் நிலையிலேயே கம்பீர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பதவியை விராட் கோலியிடமும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைமைப் பதவி ரோஹித் சர்மாவுக்கும் வழங்க வேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.