இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய தீர்மானம்

Thursday, 12 November 2020 - 14:01

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பாதுகாப்பு தொடர்பான சான்றிதல்களை 40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த விருந்தககங்களுக்கு அடுத்த வாரமளவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் தமது தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ள மற்றும் தமது அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள விருந்தகங்களுக்கே இவ்வாறு பாதுகாப்பு சான்றிதல்கள் வழங்கப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொவிட்19 தொற்றுக்கு பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நம்பிக்கை கொள்ளும் வகையில் இந்த பாதுகாப்பு சான்றிதல் வழங்கப்படவுள்ளது.