பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக younis Khan நியமிக்கப்பட்டுள்ளார்...!

Thursday, 12 November 2020 - 21:20

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+younis+Khan+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவரான யூனிஸ்கான் (younis Khan) அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் வரை அவர் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள நியுஸிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் போட்டித் தொடர் முதல் அவர் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய யுனிஸ்கான் 10 ஆயிரத்து 99 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற 20 க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக யுனிஸ்கான் செயற்பட்டிருந்த நிலையில், அந்த தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது