ஒலிம்பிக் போட்டிகளில் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பில் ஜப்பான் அவதானம்

Friday, 13 November 2020 - 18:08

%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பில் ஜப்பான் அவதானம் செலுத்தியுள்ளது.

அடுத்த வருடம் கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், போட்டியில் பங்குகொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 14 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பீ.சி.ஆர் பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் டோக்கியோ ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் அடுத்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டிகளை இந்த வருடம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடுத்த வருடம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.