மும்பை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்ட்யா..! வெளியான காரணம்

Friday, 13 November 2020 - 22:02

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE..%21+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நிறைவு பெற்ற 2020க்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சகலதுறை வீரர் குர்னால் பாண்ட்யா விளையாடியிருந்தார்.

இந்த தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக கிண்ணத்தை வென்றது. இறுதிப்போட்டியில் வெற்றிக்கான ஓட்டத்தை இவரே பெற்றிருந்தார் என்பது விசேட அம்சமாகும்.

இந்நிலைiயில், தொடர் நிறைவடைந்ததை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பயோ பபுளில் இருந்து அனைத்து வீரர்களும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

அதில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மட்டும் அப்படியே டுபாயிலிருந்து ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

அதனால் குர்னால் பாண்ட்யா டுபாயிலிருந்து மும்பை திரும்பிய நிலையில் மும்பை விமான நிலையத்தில் வருமான புலனாய்வு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க பொருட்களை அவர் வைத்திருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.