இந்திய அணி குழாம் தெரிவு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்குலி

Saturday, 14 November 2020 - 13:20

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி குழாம் தெரிவு குறித்த சில விமர்சனங்கள் தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி குழாம் தேர்வு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹிட் சர்மா குழாமில் உள்வாங்கப்படவில்லை.

எனினும், ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் விளையாடியிருந்தார்.

காயம் ஏற்பட்டிருந்த வருண் சக்கரவர்த்தி குழாமில் உள்ளீர்க்கப்பட்ட நிலையில், பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு நடராஜன் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்.