அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றுள்ளார்.
இதன்படி அவர் அமெரிக்காவின் தேர்தல் குழுவில் 306 ஆசனங்களைக் கைப்பற்றி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1992ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக ஜோர்ஜியாவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றிப் பெறுகிறார்.
இன்னும் தேர்தல் முடிவு வெளிவராமல் இருந்த மற்றுமொரு மாநிலமான வடக்கு கரொலினாவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றிருப்பதாகவும், இதன்படி அவர் 232 ஆசனங்களைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ட்ரம்ப் தமது தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.