ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வொஷிங்டன் நகரில் ஆர்ப்பாட்டம்..!!

Sunday, 15 November 2020 - 9:49

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21%21
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பெய்டன் வெற்றியைப் பெற்றிருந்தாலும் தோல்வியை 
ஏற்றுக் கொள்ளாத குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், 
 
நேற்று வொஷிங்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்நாட்டுத் தீவிர வலதுசாரிகள் இயக்கங்களும் கலந்து கொண்டுள்ளதாக 
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
மேலும், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப்பின்  கட்சி மேற்கொண்டுள்ள 9 மனுக்களுக்கு நேற்றைய தினம் மறுக்கப்பட்டு அல்லது திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.