வெளியானது ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர்..! கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்

Sunday, 15 November 2020 - 13:02

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன்,நித்தி அகர்வால், பாரதிராஜா என பலர் நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாலை 4.32 மணிக்கு  வெளியிடப்பட்டுள்ளது.

தனது உடல் எடையை 30கிலோகிராமால் குறைத்து இந்த படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு.

இந்த படத்தின் டீசரை தற்சமயம் சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கிராமிய பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

அத்துடன், இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்துடன் எதிர்வரும் ஜனவாரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.