அடுத்த பருவகாலத்துக்குள் உலகம் வழமைக்கு திரும்பிவிடும்- பயோன்டெக் நிறுவனம் அறிவிப்பு

Sunday, 15 November 2020 - 20:21

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அடுத்த பருவகாலத்துக்குள் உலகம் வழமைக்கு திரும்பிவிடும் என்று கொவிட் 19 நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கின்ற பயோன்டெக் நிறுவனத்தின் இணை நிறுவுனர் உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற தடுப்பூசி 90 சதவீதமான மக்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

அந்த அளவுக்கு இல்லை என்றாலும், 50 சதவீதமாவது நோய்த்தொற்றுப் பரவலை இந்த மருந்து தடுக்கும்.

இதுவே மிகப்பெரிய விளைவாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஊசிமருந்து சுமார் 43 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானியா ஏலவே 30 மில்லியன் தடுப்பூசிகளை கோரி இருந்த நிலையில் 10 மில்லியன் தடுப்பூசிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 300 மில்லியன் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாக, பயோன்டெக் நிறுவனத்தின் இணை நிறுவுனர் உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.