ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 100 கோடி ரூபாவை செலுத்தியுள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை...!

Monday, 16 November 2020 - 9:19

%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+100+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88...%21
டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்த்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கட் அணி நேற்றைய தினம் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கட் அணியினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியன் ப்ரிமியர் போட்டிகளை நடத்தியமைக்காக இந்திய கிரிக்கட் கட்டுப்பட்டு சபை ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு 100 கோடி இந்திய ரூபாவை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனது. 

இதன்காரணமாக அந்த போட்டிகளை ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்தது. 

இதன்படி அந்த போட்டிகள் ஷார்ஜா டுபாய் அபுதாபி ஆகிய மைதானங்களில் இடம்பெற்றன. 

இந்தநிலையில் ஐபிஎல் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை 100 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன