துறைமுக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புகின்றன..!

Monday, 16 November 2020 - 10:41

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9..%21
நாட்டிலுள்ள துறைமுக நடவடிக்கைகள் வழமை நிலைமைக்கு திரும்பி கொண்டிருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வாரத்திற்குள் கொழும்பு துறைமுகத்தின் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் கடல் சார்ந்த கேந்திரத்துடன் தொடர்புப்பட்ட அனைத்து தரப்பினரும் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகலாவிய விநியோகத்திற்கு பாரிய சவால் எதிர்நோக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுபேறு என்ற ரீதியில் பெரும் எண்ணிக்கையிலான கொள்கலன் கப்பல்கள் மற்றும் ஏனைய கப்பல்களினால் உலகின் பெரும்பாலான துறை முகங்களுக்குள் பிரவேசிக்க முடியாதுள்ளதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்துள்ளார்.