இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது...!

Monday, 16 November 2020 - 13:53

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81...%21
இந்தியாவில் மூன்று மாதங்களின் பின்னர் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்து 548 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 435 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவின் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்து 45 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரையில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 70 பேர் உயிரிழந்தனர்.

எவ்வாறாயினும் இந்தியாவில் தொற்றுறுதியான 82 லட்சத்து 49 ஆயிரத்து 579 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.