மாத்தளை விளையாட்டரங்கை புணரமைக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது...!

Monday, 16 November 2020 - 14:03

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%21
மாத்தளை விளையாட்டு அரங்கை உடனடியாக புணரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வசதிகளை கொண்ட மாத்தளை விளையாட்டு அரங்கு 2014 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் அதன்பின்னர் அது பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட நிலையில், நாட்டின் வளம் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அதனை உடனடியான புணரமைத்து விளையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.