அமெரிக்காவின் புதிய இரு மாநிலங்களுக்கு புதிய கொவிட் கட்டுப்பாடுகள்

Monday, 16 November 2020 - 15:55

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அமெரிக்காவில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 10 லட்சம் பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறைந்த பட்சம் 45 மாநிலங்களில் இந்தமுறை மிகக்கூடிய கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் மொத்தமாக 11 மில்லியன் மக்கள் கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

2லட்சத்து 46 ஆயிரத்து 108 பேர் இந்த நோயால் மரணித்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் வொசிங்டன் ஆகிய மாநிலங்கள் புதிய கொவிட் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

உயர் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டிருப்பதுடன், விருந்தங்களுக்குள் நுகர்வோரை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.