சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர்

Monday, 16 November 2020 - 19:16

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திம் பெயின் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தெற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது கொவிட்19 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில் தாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களின் வீரர்கள் அடிலெயிடில் இருந்து திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி திம் பெயின், மெத்தீவ் வாட் உள்ளிட்டவர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.