டொனல்ட் ட்ரம்பினால் கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம்..!

Tuesday, 17 November 2020 - 10:22

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D..%21
புதிய நிர்வாகத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடையாக இருப்பதனால் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதாக ஜனநாயக வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்கு இரண்டு தரப்பிலிருந்தும் ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை விளையாட்டாக எண்ண வேண்டாமென அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மனி மிச்சல் ஒபாமா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 காரணமாக 712 பேர் மரணித்துள்ளதோடு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 892 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.