தாய்லாந்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம்

Tuesday, 17 November 2020 - 18:49

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
தாய்லாந்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் என்பன நடாத்தப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் அரசியலமைப்பு மாற்றத்தை வலியுறுத்திய கடந்த நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

எனினும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டுப்பாட்டு எல்லையை மீறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பை திருத்துவதற்காக வழிமுறைகள் தொடர்பில் தாய்லாந்து சட்டவல்லுநர்கள் ஆராய்கின்றனர்.

இதற்கிடையில் முன்னாள் இராணுவ ஆட்சிக்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.