எத்தியோப்பியாவில் முழுமையான மனிதாபிமான நெருக்கடி- ஐ.நா சபை தெரிவிப்பு

Tuesday, 17 November 2020 - 22:08

%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-+%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எத்தியோப்பியாவில் முழுமையான மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் வடக்கு திக்ரேய் பிராந்தியத்தில் செயற்படும் திக்ரெய் மக்கள் விடுதலை முன்னணிக்கும், அரசாங்கப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

விடுதலை முன்னணியின் போராளிகள் சரணடைவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3 நாட்கள் அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில், அங்கு இறுதிக்கட்ட தாக்குதல் நடத்தப்படுவதாக எத்தியோப்பியாவின் பிரதமர் அறிவித்துள்ளார்.

எனினும் தாக்குதல்கள் இடம்பெறும் பகுதியில் இருந்து இதுவரையில் 27ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அண்டை நாடான சூடானுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.