15 வருடத்திற்கு பின் பாகிஸ்தான் செல்லவிருந்த இங்கிலாந்து அணிக்கு தொடரும் சோகம்

Tuesday, 17 November 2020 - 22:12

15+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+
இங்கிலாந்து அணியின் பாகிஸ்தானுக்காக கிரிக்கட் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று, மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கவிருந்தது.

எனினும் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி இலங்கை மற்றும் இந்தியாவிற்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறது.

இந்தநிலையில் பாகிஸ்தானுக்கும் செல்வது சாத்தியமற்றது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டோபர் மாதம் அளவில் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.