LPL தொடர் - கொழும்பு கிங்ஸ் அணி முக்கியஸ்த்தருக்கு கொரோனா

Wednesday, 18 November 2020 - 9:16

LPL+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
LPL தொடரின் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கபீர் அலிக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக க்ரிக்இன்ஃபோ விளையாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிற போதும், இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஏலவே டேவ் வொட்மோர் இந்த அணிக்கு பயிற்றுவிப்பார் என்று அறிவிக்கப்பட்டு, பின்பு அந்த பதவி கபிர் அலிக்கு வழங்கப்பட்டிருந்தது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இந்தமாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.