ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி

Wednesday, 18 November 2020 - 10:33

%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ஜோ பைடனுடனான தொலைபேசி உரையாடலில், இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான தங்களது உறுதியான உறுதிப்பாட்டை தாம் மீண்டும் வலியுறுத்தியதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னுரிமை பிரச்சினைகளான, கொவிட்-19 தொற்று பரவல்,  காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு என்பன குறித்தும் தாங்கள் கலந்துரையாடியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா தேவி ஹாரிசஸுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
 
கமலா தேவி ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க வம்சாவளி உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக  அவர் தெரிவிததுள்ளார்.