இந்தியாவில் 89 இலட்சத்தை நெருங்கியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Wednesday, 18 November 2020 - 15:17

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+89+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இன்று (18) காலை நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் 38,617 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அந்நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 89 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

அதேபோல, நேற்றைய தினத்தில் மாத்திரம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகி 474 பேர் மரணித்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, அங்கு இதுவரையில் மொத்தமாக பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 30,993ஆக அதிகரித்துள்ளது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த காலங்களில் குறைந்தளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.