அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸூக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

Wednesday, 18 November 2020 - 16:23

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர்.

இதையடுத்து, வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் தொடங்கி உள்ளார்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவருக்கும் உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். அதுமட்டுமின்றி கொரோனா, காலநிலை மாற்றம், இரண்டு நாடுகளின் ஒற்றுமை குறித்து ஆலோசனை செய்ததாகவும் இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.