ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து வெளியேற்றப்படவுள்ள அமெரிக்க துருப்புக்கள்

Wednesday, 18 November 2020 - 17:01

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்பினர் வெளியேற்றப்படவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்காவின் சிரேஷ்ட்ட குடியரசு கட்சி உறுப்பினர்களும் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இரண்டு நாடுகளில் இருந்தும் அமெரிக்கா 2500 துருப்பினரை மீளழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரி நடுப்பகுதிக்கு முன்னதாக அவர்கள் நாட்டுக்கு திருப்பியழைக்கப்படுவார்கள் என்று, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.

அமெரிக்க படையினர் வெளிநாட்டு யுத்தங்களில் பங்குக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டொனால்ட் ட்ரம்ப், நீண்டகாலமாகவே படையினரை மீளழைப்பது குறித்து அறிவித்து வந்திருந்தார்.

எனினும் இந்த தீர்மானத்துக்கு மிக உயர்ந்த விலையை செலுத்த வேண்டி ஏற்படும் என்று நேட்டோ படைத் தலைமை அறிவித்துள்ளது.

அத்துடன் சென்ட் சபையின் தலைவர் மிட்ச் மெக்கொனெலும் இந்த தீர்மானம் மிகப்பெரிய தவறு என்று விமர்சித்துள்ளார்.