அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெறுவதில் சந்தேகம்..?

Wednesday, 18 November 2020 - 18:53

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%3F
மெல்போர்னில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், திட்டமிட்டபடி இடம்பெறுமா? என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாத ஆரம்பத்தில் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்குபற்றும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றாலும், தனிமைப்படுத்தல் காலத்தில் அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான சிக்கல் நிலவுகிறது.

அத்துடன் விக்டோரியா மாநிலத்தின் அரசாங்கம் வீரர்களை டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் மெல்போர்ன் வருவதற்கு அனுமதிக்காது என்றும், டிசம்பர் மாத இறுதியிலேயே வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த தொடர் 2 அல்லது 3 வாரங்கள் பிற்போடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.