சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தகவல்

Wednesday, 18 November 2020 - 19:02

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பு மருந்து, மத்தியநிலை பரிசோதனைகளில் வெற்றியளித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொவிட்19 தடுப்புக்காக பல்வேறு தடுப்பூசிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆராச்சியாளர்களின் தகவல்படி, சீனோவெக் பயோடெக் தடுப்பூசி, விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாக தெரியவந்துள்ளது.

700 பேருக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் அது வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கத்தேய நாடுகளில் 3 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், சீனாவின் தடுப்பூசி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட்19 தடுப்பூசி 90 சதவீதம் வினைத்திறனானது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியானது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 93 சதவீதம் வினைத்திறனாக செயற்படுகின்றமை தெரியவந்துள்ளது.