தகரப் பேணியில் அடைக்கப்படட மீன்களுக்கான சில்லறை விலை 200 ரூபாவாக நிர்ணயம்

Thursday, 19 November 2020 - 10:01

%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+200+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தகரப் பேணியில் அடைக்கப்படட மீன்களுக்கான சில்லறை விலை 200 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளுர் ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் நேற்று வர்த்தக அமைச்சில் நடத்தப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக 200 ரூபா என்ற சில்லறை விலைக்கு விற்பனை செய்வதற்கு வழங்குமாறு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு ரின் மீன் உற்பத்தியாளர் சங்கம் முழுமையான இணக்கத்தை தெரிவித்தனர்.