கிரிக்கட் பிரியர்களுக்கான விசேட தகவல்..!

Friday, 20 November 2020 - 16:29

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு குறைந்த பட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

இதற்கமைய குறைந்த பட்சம் ஒருவர் 15 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தனது 16 ஆவது வயதிலும் பாகிஸ்தான் அணியின் ஹசன் ரசா 14 ஆவது வயதிலும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.