இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்- மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

Saturday, 21 November 2020 - 11:36

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருவதாக இந்திய வர்த்தக மற்றம் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆசிய சுகாதார மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தடுப்பூசி தயாரிக்கப்படும் வரை, கொரோனா தொற்று குறித்து அலட்சியமாக செயற்பட முடியாது என இந்திய பிரதமர் கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

எதிர்காலத்தில் மலிவான மற்றும் புதுமையான சுகாதார தீர்வுகளை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றும் எனவும் இந்திய வர்த்தக மற்றம் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.